தெய்வங்களுக்கு குடும்பம் உண்டா
அதை சற்று விரிவாக பார்ப்போம்.கடவுள் ஒருவரே என்பது அனைவரும் அறிந்ததே,எல்லோருக்கும் தெரியும்.கிறிஸ்தவத்தில் யேசு நாதர்,முகம்மது அல்லா,என்று மனித வடிவில்,ஒழி வடிவிலும் தெய்வங்கள் உண்டு.உண்மையில் இவரகள் யார் என்று கேட்டால் ,அந்த ஆதி அந்தமிலாத பரம்பொருள் ஒளியிலிருந்து பிறந்து வந்த ஒரு ஒளியே இவர்கள் அனைவரும்,இவர்கள் ஒவ்வொருவருக்கும் பணி ஒதுக்கப்பட்டு பிறந்து தங்கள் பணியை செய்து ,மீண்டும் காலம் முடிந்த பின்பு அந்த விராட்புருஷனிடம் சென்று ஜோதியோடு ஜோதியாக ஐக்கியமாகவார்கள்.
இவர்கள் ஆதி அந்த ரூபத்தில் இருந்து நேரிடையாக வந்ததால் இவர்களை அவதார புருஷர்கள் என்று பெயரிட்டு வழங்குகிறோம்.அனால் இவர்கள் அந்த இறைவனின் பணியாளர்களே ,தங்கள் காலம் முடியும்வரை.நாம் அவர் கூறிய சிந்தனைகளை நினைந்து வாழவே ,அவர்கள் விட்டு சென்ற உபதேசங்கள் நம்மை,தெய்வத்தோடு ஐக்கியமாக வைக்க உதவுவதால் அவரையும் இறைவன் என்று நாம் வணங்குகிறோம்.
இதற்க்கு உதாரணம் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
இந்த அவதார புருஷர்கள் மற்ற மனிதர்களை போல் அல்லாமல் வேறு பட்டு இருக்க மன ரீதியாகவும்,உடல் ரீதியாகவும் பல மாறுபட்ட தோற்றத்துடன் பிறப்பு எடுப்பார்கள்.
1.கைகள் நீண்டு இருக்கும்.முழங்கால் அளவு.
2. காது கண்ணுக்கு நேராக இல்லாமல் சற்று ஒரு இன்ச் கீழே இருக்கும்
இது போன்று இன்னும் சில சாமுத்ரிக லச்சணம் இருக்கும்.அதை வைத்துதான் இவர் தெய்வ பிறவி என்று உணர முடியும்.இதை மிக உயர்ந்த யோகிகளால் தான் உணர முடியும்.
தெய்வ பிறவி என்று கூறுவது,வேறு ஒன்றும் அல்ல ,தற்போது இருக்கும் ஆத்மாவானது,ஒரு நேரத்தில் சிவ பதவியில் இருந்து சில காலம் சேவை செய்திருக்கும்.இப்படி பட்ட ஆத்மாக்களுக்கே குருஜி,யோகி,ஞானி என்று உலகம் தெரியுமழவிற்கு அந்த ஆத்மாவானது புண்ணியம் பெற்று ,அந்த பரஞ்சோதியிடம் ஐக்கியமாகும்.ஆனால் சாதாரண மனிதர்கள் கூட இறந்தால் முக்தி அடைய முடியும்,ஆனால் அது உலகத்திற்கு தெரியாது,அதை உணரவும் முடியாது.ஏனெனில் அந்த ஆத்மாவின் பூர்வ ஜென்ம புண்ணிய பலன் அவ்வளவுதான் இருக்கும்.
ஆனால் ஒரு சிலருக்கே காஞ்சி மகா பெரியவர் போல் மிக கொடுப்பினையோடு வாழ்ந்து மேலே செல்ல அமைப்பு இருக்கும்.அவர்கள் அப்படிப்பட்ட நிலைக்கு வர அவர்கள் முற்பிறவியில் தேவனாக இருந்தோ,இல்லை இறைவனின் ஏவலாளியாக இருந்தோ அந்த ஒதுக்க பட்ட பணியை மிக சிறப்போடு செய்யும் ஆத்மாவிக்கே இந்த பரிபூரண நிலை கிட்டும்.அதக்குதான் நம் முன்னோர்கள் "நல்லதையே செய் "என்றனர்.
மேற்கூறிய இந்த ஏவலாளியாக இருப்பது இறைவன் படைப்பில் இருக்கும் நம்மை காப்பாற்றும் இந்த கிராம தெய்வங்கள்,நவகிரகங்கள்,தேவர்கள் போன்ற நம்மை காக்கும் பிறவிகளே.இந்த ஒரு ஆத்மாவானது ஒரு கட்டத்தில்(ஏதேனும் யுகம்,கற்பம்) இப்படி பட்ட பிறவி என்பது எடுக்கும்,அப்படி எடுக்கும் போது அதன் புண்ணியத்தை கொண்டு மனித பிறவி எடுத்து முக்தி அடைகிறது.
இப்படி இருக்கும் ஆத்மாவில் சில கிராம தெய்வங்களாக பிறப்பு எடுக்கிறது.உதாரணமாக கருப்பசாமி என்பது ஒரு வீரன் ,அவன் ஒரு காலத்தில் மக்களை கொலை,கொள்ளை இருந்து காத்ததால் அவனை மக்கள் காவல் தெய்வமாக ஏற்றனர்.அவனும் சூட்சம சக்தியாக இறைவனின் பணியாளனாக பிறந்து காக்கும் பணியை செய்கிறான்.கண்ணுக்கு தெரியும் உயிரினம் மட்டும் பிறப்பு எடுப்பதில்லை,கண்ணுக்கு தெரியாத உயிரினமும் பிறப்பு எடுக்கிறது.
அய்யனாரும் இப்படிதான் ,யாரோ ஒருவன் நமக்கு நல்லது செய்யும் ஒருவன் செய்கிறான் பாதுக்கப்பில் ,அப்படி செய்யும் அயன் யாரோ என்று கூறி அந்த பெயர்தான் அய்யனார் என்று வந்தது.
இப்படி பிறப்பு எடுத்த சூட்சம சக்திகள் ,தங்களுக்கு ஒதுக்க பட்ட பணி முடிந்த பின்பு எஞ்சிய கர்வினையை தீர்க்க,மனிதனாகவோ,அல்லது பணக்கார வீடு நாயாகவோ பிறப்பு எடுத்து முக்தி என்பது அடைகிறது.இப்படி ஒரு காலத்தில் தெய்வமாக இருந்து தற்போது மனித பிறப்பு எடுத்து எஞ்சிய கர்ம வினையை அனுபவித்து முடித்து முக்தி அடையும் சில பேரை சந்தித்து இருக்கிறேன்.இன்னனும் இருக்கிறார்கள்.
சிவகங்கை வெட்டுடையார் காளியம்மன் கோவில் உண்டு,அந்த அம்மனுக்கு ,அண்ணன் அய்யனார்,அவளுக்கு மகளும் உண்டு.இப்படி அண்ணன்,தம்பி உறவு முறை கொண்டு இயங்க காரணம் தனி ஒரு சக்தியாக இயங்க முடியாது.இந்த அம்மனுக்கு என்று சில கடமைகள் ஒதுக்க பட்டு அது மக்களை காக்கும் பணியை செய்து வருகிறது.இதற்கும் ஒரு காலத்தில் நம்மை போன்று மனித பிறவி எடுத்த ஆத்மாவே ,அதன் தபோ பலனாலும்,புண்ணியத்தாலும் தெய்வம் என்று வழங்கப்பட்டு,அந்த பார்வதி தேவியின் முழு சக்தியும் இந்த அம்மன் மூலம் வெளிப்பட்டு மக்களுக்கு உதவுகிறது.சூட்சமத்திர்க்கே சூட்சம சக்தி இருந்து செயல்படுகிறது
ஆனால் இதை யாருக்கும் தெரியாது,தெரிந்தாலும் அளசியாமாக விட்டு விடுவர்.இப்போது இருக்கும் கலியுகம் அப்படி ?
நாமும் நல்லதே செய்வோம்,பல விஷயங்கள் ஒரே பதிவில் கூற முடியாது என்பதால் சுருக்கி கூறுகிறேன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக