வெள்ளி, 9 டிசம்பர், 2016

வியாழன், 23 ஜூன், 2016

சாபம் போக்கும் ஸ்தல சயன பெருமாள்: கடன் பிரச்சினை தீர்க்கும் லட்சுமி நரசிம்மர்

சென்னை: முன்னோர் சாபம், முனிவர் சாபம், விலங்குகள் சாபம் என எத்தனையோ சாபங்களும், தோஷங்களும் மனிதர்களை பாதிக்கின்றன. இதே போல கடன் பிரச்சினையும் மனிதர்களை கலங்க வைக்கும், எத்தனையோ பேருக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது கடன். இந்த இரண்டு சிக்கல்களையும் தீர்க்கும் ஆலயம் மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது.

மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோவில். இது 108 வைணவ திருத்தலங்களில் 63வது தலமாகும். திருப்பாற்கடலில் வைகுண்டநாதனாக, பாம்பணையின் மீது சயனித்து பக்தர்களின் பாவங்களைக் களைந்து வருகிறார் பள்ளிகொண்ட பெருமாள். ஆனால் கடல் மல்லையில், வெறும் தரையில் சயனித்தபடி பக்தர்களுக்கு திருமால் அருள்புரிந்து வருகிறார்.

http://tamil.oneindia.com/astrology/news/sthala-sayana-perumal-temple-mamallapuram-249828.html

புண்ணியம் கிடைக்கும் மேலும் நம் முன்னோர்களுக்கு இந்த புஷ்கரணி தெப்பக் குளத்தில் நீராடி மகாளய அமாவாசை உள்ளிட்ட விசேஷ தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுத்தால் காசி, கயா, ராமேஸ்வரத்தில் கிடைக்கும் புண்ணியத்தை விட பல மடங்கு புண்ணியமும், மனநிறைவும், மகிழ்ச்சியும் கொடுக்கும் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களாலும் நம்பப்பட்டு வருகிறது.

பிரச்சினைகள் தீர வழிபாடு 

கலிகாலத்தில் நமக்கு வரும் கேடுகளைக் களைய இந்தப் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது. இத்தலத்தில் தனிச் சன்னிதியில் பெருமாளின் இருபுறமும், நிலமங்கைத் தாயாரும், ஆண்டாளும் அருள் பாலிக்கிறார்கள். கோவில் வெளிச்சுற்றில் ஆஞ்சநேயர், ராமர், பூதத்தாழ்வார், கருடன், ஆழ்வார்கள் மற்றும் லட்சுமி நரசிம்மருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. 

கடன் தொல்லை தீரும் 

லட்சுமி நரசிம்மரின் சன்னிதியின் எதிரில் உள்ள சுவரில் லட்சுமி நரசிம்மரின் ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்' பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி நட்சத்திர தினங்கள், பிரதோஷ காலங்கள், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்திசாயும் மாலை வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து, நெய் தீபமேற்றி ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்' பாராயணம் செய்து வழிபட்டால் எத்தகைய கடன் தொல்லையானாலும் உடனே அகன்று விடும். வறுமை அகலும். 

பிரச்சினை தீரும் 

மானிடராக பிறந்தவர்கள் இந்தப் பெருமாளை ஒரு முறையாவது தரிசித்தால் முக்திப்பேறு கிட்டும். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது மக்களின் நம்பிக்கை. மேலும் இக்கோவில் சைவ, வைணவ ஒற்றுமைக்கு வழிவகுக்கின்ற தலம் ஆகும். 

வீடு நிலம் வாங்கலாம் இத்தல ஸ்தல சயனத்தாரையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபடல் மிகச் சிறப்பு. இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கப்படும் இக்கோவில் காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகில் இந்த அலயம் அமைந்துள்ளது. 

Read more at: http://tamil.oneindia.com/astrology/news/sthala-sayana-perumal-temple-mamallapuram-249828.html#clslide249828-2

வாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள்

வாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள்

அவரவர்  ஜென்ம நட்சத்திரத்திற்குரிய வடிவங்களை தினமும் பார்த்து வந்தாலோ அல்லது பயன்படுத்தி வந்தாலோ வாழ்க்கையில் எளிதில் வெற்றியடையலாம். ராமன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான வில்லேந்தி ராவணனை வென்றான். கிருஷ்ணன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான தேரை ஓட்டி பாண்டவர்களுக்கு வெற்றி தேடி தந்தான்.
நட்சத்திரவடிவம்
அஸ்வினி                 - குதிரைத்தலை
பரணி                       - யோனி,அடுப்பு,முக்கோணம்
கிருத்திகை               - கத்தி,கற்றை,வாள்,தீஜ்வாலை
ரோஹிணி               - தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம்
மிருகசீரிடம்             - மான்தலை,தேங்கைக்கண்
திருவாதிரை             - மனிததலை,வைரம்,கண்ணீர்துளி
புனர்பூசம்                 - வில்
பூசம்                           - புடலம்பூ,அம்புக்கூடு,பசுவின்மடி
ஆயில்யம்                 - சர்ப்பம்,அம்மி
மகம்                          - வீடு,பல்லக்கு,நுகம்
பூரம்                          - கட்டில்கால்,கண்கள்,அத்திமரம்,சதுரம்,மெத்தை
உத்திரம்                   - கட்டில்கால்,கம்பு,குச்சி,மெத்தை
ஹஸ்தம்                   - கை
சித்திரை                   - முத்து,புலிக்கண்
ஸ்வாதி                     - பவளம்,தீபம்
விசாகம்                    - முறம்,தோரணம்,குயவன்சக்கரம்
அனுசம்                     - குடை,முடப்பனை,தாமரை,வில்வளசல்
கேட்டை                   - குடை,குண்டலம்,ஈட்டி
மூலம்                        - அங்குசம்,சிங்கத்தின்வால்,பொற்காளம்,யானையின்துதிக்கை
பூராடம்                     - கட்டில்கால்
உத்திராடம்              - கட்டில்கால்
திருவோணம்            - முழக்கோல்,மூன்றுபாதச்சுவடு,அம்பு
அவிட்டம்                 - மிருதங்கம்,உடுக்கை
சதயம்                        - பூங்கொத்து,மூலிகைகொத்து
பூரட்டாதி                  - கட்டில்கால்
உத்திரட்டாதி          - கட்டில்கால்
ரேவதி                       - மீன்,படகு