ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

தவறானவாஸ்துஅமைப்புகளால் - ஏற்படும் தீய பலன்கள:-

 

வாஸ்து சாஸ்திரம்:-

கண்ணுக்கு புலனாகாத சக்திகளே நம்மையும், நம்முடைய வாழ்க்கையையும் வலி நடத்துகின்றன. திருஷ்டிக்கு (பார்வைக்கு அகபடாதது). அப்பாற்பட்ட சக்திகள் அதிர்ஷ்டம் என அழைக்கபடுகின்றன. கிழக்கும் மேற்கும் சூரியனால் இணைக்கபடுகின்றன. அதுபோல வடக்கும் தெற்கும் காந்த சக்திகளால் இணக்கபடுடுகின்றது.

இவ்விரு இயற்கை சக்திகளும் தம் போக்கில் இயங்குவதை அனுகூலமாக அமைதுக்குகொள்வதே "வாஸ்து" எனப்படும் சாஸ்திரம் என அழைக்கபடுகின்றது. 

இயற்க்கை சக்திகள் "Short Circuit" ஆகவிடாமல் முறையாக உபயோகப்படுத்த எந்த இடத்தில வாசல், ஜன்னல் அமைப்பது? போன்ற விஷயங்கள் சரியாக அமைப்பதனால் ஸ்தானங்கள் பலன்பெற்று வாஸ்து பலம் யோகமகாவும், மாறி அமைப்பதினால் வாஸ்து வக்ரமாகவும் அமைந்து நம்மையும், நம்முடைய வாழ்வையும் பாதிக்கின்றது.


பரிபூரண வாஸ்து சாஸ்திரம்:-

பூமியின் மீது அமைந்த எந்த ஒரு மனைக்கும் அதனுள் அமையும் எல்லா விதமான கட்டிட அமைப்பிற்கும் பரிபூரண வாஸ்து சாஸ்திரம் மிகவும் அவசியமாகும் அவ்வாறு அமைக்கபட்டால் மாத்திரமே அங்கு அமையும் வீடானாலும், கடையானாலும் தொளில்கூடங்கள், வியாபார காம்ப்ளெக்ஸ்கள், மிகப்பெரிய தொழிற்சாலைகள் ஆனாலும் அங்கு ஒரு இணக்கமான நல்ல அமைப்பும் சீரான பொருளாதார வளர்ச்சியும் மற்றும் பயன் பெறுபவர்களுக்கு ஏற்றமான, மகிழ்வான வாழ்வும் அமைந்து வளம் பெறுவார்கள்.


தவறானவாஸ்துஅமைப்புகளால் - ஏற்படும் தீய பலன்கள:-


  1. மனையின் வடக்கு மற்றும் கிழக்கு பாகங்கள் உயர்வாக இருந்து மற்ற பக்கங்கள் இருப்பின் பொருளாதார தாழ்வு, வம்ச வளர்ச்சி பாதிப்பு போன்ற தீய விளைவுகளே ஏற்படும்.

  2. மனையின் வடக்கு மற்றும் கிழக்கு சுற்றுச் சுவர்களில் கட்டிடங்கள் அமைத்து ஈசானிய மூலை மூடப்பட்டால் உரிமையாளரின் உடல்நலம் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும்.ஆயுள் குறையும்.வம்சவளர்ச்சி தடைபட்டு தீயவிளைவுகளே ஏற்படும்.

  3. மனையின் வடகிழக்கு மூலை குறைவுபட்டலோ,வீட்டு அமைப்பில் வடகிழக்கு குறைவுபட்டலோ ஆண் வாரிசு இல்லாமல் போகும்.மீறி ஆண்வாரிசு இருந்தாலோ ஆயுள் குறைவாகவோ அல்லது முரட்டு குணம் கொண்ட தீய நடததையுள்ளவர்க்ளாகவோ இருக்கலாம்.

  4. வடகிழக்கில் கட்டிடங்களை அமைத்து தென்மேற்கில் கிணறு போன்ற பள்ளமான அமிப்புகளிருந்தால் அந்த வீட்டில் துர்மரணம் ஏற்படும்.

  5. வீட்டு மனையில் வடகிழக்கு மூலை நீண்டு அமைந்திருந்து, வீட்டு கட்டிட அமைப்பில் வடகிழக்கு பாதிப்படைந்தால் பெரியவர்கள் உயிரோடு இருக்க இளவயதினர் உயிர் பறிப்படையும்.

  6. வடகிழக்கு இடத்தில குப்பைக் குழி அமைப்பதோ, கழிவறை அமைப்பதோ மிகவும் தீய பலன்களைத தரும் பொருளாதார தாழ்வு, அவப்பெயர்,தீராத நோய்கள் போன்ற பாதிப்பைத தரும். இங்கு சமையல் அறை இருப்பினும் இதே தீய பலன்கள் ஏற்படும்

  7. மனையின் கிழக்கு பாகம் மேடாக இருந்தாலும்,கிழக்கு சுற்றுச் சுவற்றோடு சேர்ந்து கட்டிடம் அமைந்து இருந்தாலோ பொருளாதார வீழ்ச்சியும்,வம்சவளர்ச்சியும் பாதிக்கும். வாரிசுகள் அறிவுவளர்ச்சியில் குறைவாக இருக்கும்படியான தீய பலன்களே ஏற்படும்.

  8. கிழக்குபாகத்தில் இடம் இல்லாமல் சுற்று சுவற்றோடு சேர்ந்து மேற்கில் சரிவாக அமைக்கும் வீட்டில் உள்ளோர் தீராத வியாதிகள் அல்லது நரம்பு சம்பந்தமான மற்றும் கண் சம்பந்தமான நோய்களால் பாதிப்பு அடைவார்கள்.

  9. தென்கிழக்கில் கிழக்கிலிருந்து பாதைத்தாக்கம் உள்ள வீட்டில் உள்ள பெண் முரட்டு சுபாவத்துடன் மற்றவர்களுடன் அடிக்கடி சண்டையிடுபவளாகவும் இருப்பாள். ஆண் தவறான பழக்கங்களில் சிக்கித் தவிப்பார்கள்.

  10. தென்மேற்கில் தெற்கிலிருந்து பாதைத் தாக்கம் உள்ள வீட்டில் உள்ள பெண் உடல்நல பாதிப்புடனும் தவறான பழக்கங்களுக்கும், இரத்த அழுத்தம், படப்படப்பு மற்றும் திடீர் மரணங்களும் ஏற்படலாம்.

  11. மனையின் வடக்கில் இடமில்லாமலும் தெற்கில் அதிக காலியிடங்களுடனும் தென்மேற்கில், தெற்கில் கிணறு போன்ற பள்ளமான அமைப்பிருந்தால் அந்த வீட்டின் பெண்கள் தீராத நோய்களால் பாதிப்படைவார்கள். மனநலமும் பாதிப்பு அடையும. பொருளாதார வீழ்ச்சியும், திடீர் மரணங்களும் ஏற்படும்.

  12. தென்கிழக்கு மூலை தெற்கில் அல்லது கிழக்கில் வளர்ச்சி பெற்று அதே மூலையில் கிணறு போன்ற பள்ளமான அமைப்புகள் இருந்தாலும், வடக்கு சுற்றுச் சுவற்றில் வீட்டை அமைத்து தெற்கில் அதிக காலியிடங்கள் இருந்தாலும், வடகிழக்கு மூடும் படியாக கட்டிடம் அமைந்திருந்தாலும் அந்த வீட்டில் பொருளாதார வீழ்ச்சி, கடன் தொல்லை, திருட்டு, தீவிபத்துக்கள் வழக்கு விவகாரங்கள் போன்ற தீய அமைப்பே தொடரும். ஆண் வாரிசுகள் குறைவு பட்டு பெண்களுக்கான சொத்தாக மாறும் அபாயம் உண்டு.

  13. தெற்கில் அதிக காலியிடமிருந்து கிழக்கு, வடக்கு சுற்றுச் சுவர்களில் கட்டிடம் அமைத்து வடகிழக்கு பாதிப்படைந்து, தெற்கில் கிணறு போன்ற குழி அமைப்பிருந்து, தெற்கில் கூரை தாழ்வாக அமைந்திருந்தால் அந்த வீட்டின் பெண் துணை இழந்து தவிப்பாள். தீராத வியாதியாலும், தவறான பிள்ளைகளாலும் வேதனைப் படுவாள்.

  14. வடகிழக்கு எல்லையில் கட்டிடம் அமைத்து, கிழக்கு வாசல் வைத்து மேற்கிலும் தெற்கிலும் அதிக காலியிடமிருக்கும் அக்னிமூலை மனையில் வசிக்கும் கணவன் மனைவி இருவரும் சண்டையிட்டு பிரிவார்கள், குழந்தைகள் நோயாலும், தவறான வாழ்வாலும் அலைக்களிக்கபடுவார்கள்.

  15. மனையின் காளியிடதிலோ, வீட்டின் அறைகளிலோ தெற்கு பாகம் பள்ளமாக இருந்தால் பெண்களுக்கு தீராத நோய்களால் வேதனை, பொருளாதார வீழ்ச்சி மற்றும் திடீர் மரணம் ஏற்படும் .

  16. தெற்கில் அதிக காலியிடமிருந்தால் பொருளாதார நஷ்டம், வீண் விவகாரங்கள், பெண்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்படும்.

  17. தென்மேற்கு மூலையில் மேற்கில் பாதைதாக்கம் இருந்தால் அங்கு கிணறு போன்ற பள்ளமான அமைப்பிருந்தால் அது ஆண்களை தீய வழியில் நடத்தி தற்கொலைக்கு தூண்டும், தீராத நோய்கள் போன்ற தீய பலன்களை ஆண்களுக்கு ஏற்படுத்தும் தவறான அமைப்பாகும்

  18. மனையில் வடக்கு அல்லது கிழக்கு பாகத்தை விற்பனை செய்தால் பொருளாதார வீழ்ச்சியும், உடல்நல பாதிப்பு, தொழில் முடக்கம் ஏற்படும்.

  19. தெற்கு திசையிலும், மேற்க்கு திசையிலும் சுற்றுச் சுவர்களில்லாமல் காலியிடமாக, மைதானமாக இருந்தால் பொருளாதார வீழ்ச்சி, அகால மரணம்,உடல்நலப் பாதிப்பு, மனநலப் பாதிப்பு தீய பழக்கங்கள் போன்ற தீய அமைப்புகளே நடைப்பெரும்.

  20. மனையில் வீட்டு அறைகளில் கூரை அமைப்புகளில் மேற்கில் தாழ்வாக இருந்தால் பொருளாதார வீழ்ச்சி, உடல்நலப் பாதிப்பு தவறான பாதையில் சென்று நற்ப்பெயர் இழப்பு, போன்ற தீய காரியங்களே ஏற்படும். மேற்கு பாகத்தில் திண்ணைகள் தரை மட்டத்தை விட தாழ்வாக இருந்தால் மேற்சொன்ன பலன்களே ஏற்படும்.

  21. வடமேற்கு மூலையில் வடக்கில் பாதைத் தாக்கம் இருந்தால் அது பெண்களின் உடல்நல பாதிப்பிற்கும், தவறான தீய பழக்கங்கள் ஏற்படவும் காரணமாகிறது.

  22. வாய்விய மனையில் மேற்கில் முகப்பு வாசலிலிருந்து ஈசானிய மூலை மறைத்து வீட்டை கட்டினால் அந்த வீட்டார் பொருளாதார தாழ்விற்கு ஆளாகி வீட்டை விற்க வேண்டி வரும்.

  23. வாய்விய மனையில் வடமேற்கில் வளர்ச்சியோ அல்லது அந்த பகுதி மறைத்து கட்டிடம் கட்டபட்டாலோ மன அமைதியின்றி அலைந்து திரிவார்கள் தற்கொலை போன்ற தவறான முடிவிற்கும் ஆளாவர்கள்.

  24. வடக்கு பார்த்த மனையில் வடக்கில் காலியிடமில்லாமல், தெற்கில் அதிக காலியிடமிருக்குமாறு அமைந்த வீட்டில் பெண் உடல்நல பாதிப்படைந்து உயிரிழக்கச் செய்யும் படியான தீயபலன்களே ஏற்படும்.

  25. வடக்கில் வீட்டில் தரையைவிட உயர்வான திண்ணைகள் அமைந்தால் பொருளாதார தாழ்வும், அனாவசியச் செலவுகளால் மன நிம்மதியின்மையும், கடன்சுமைகளும் போன்ற தீய பலன்களே ஏற்படும்.

  26. வடக்கில் வீட்டில் தரையைவிட உயர்வான திண்ணைகள் அமைந்தால் பொருளாதார தாழ்வும், அனாவசியச் செலவுகளால் மன நிம்மதியின்மையும், கடன்சுமைகளும் போன்ற தீய பலன்களே ஏற்படும்.

  27. வடகிழக்கில் கழிப்பிடம் போன்ற அமைப்புகளிருந்தல் வீட்டில் உள்ளோரிடயே கருத்து வேறுபாடுகளால் சண்டைச் சச்சரவுகள் அதனால் சுற்றுச் சுழலில் அவப்பெயர்கள், தவறான நடத்தைகள் பொருளாதார வீழ்ச்சி, உடல் நலக்குறைவு போன்ற தீயபலன்களே ஏற்படும்.

வியாழன், 25 ஏப்ரல், 2013

வாஸ்து தோஷங்கள் பிரமிடுகளால் நிவர்த்தி













வாஸ்து சாஸ்திரம் என்பது நம்முன்னோர்களால் இயற்கையோடு இணைந்துவாழ உருவாக்கப்பட்ட கட்டிடக்கலை விஞ்ஞானம்ஆகும். அந்த வாஸ்துமுறைகளில் அமைப்பு ரீதியான, நீள, அகல, உயரம் போன்ற மனையடி அளவுகளே வாஸ்து என்று கூறப்படுகிறது. இத்தகைய அமைப்பு சார்ந்த கட்டிடம் 25% 30% மட்டுமே சக்தியையும், வாஸ்துபலத்தையும் உருவாக்கும். எனவே 100% வாஸ்து பலத்தை மேம்படுத்த, சக்திஓட்டங்களை அதிகரிக்க இன்று நடைமுறைக்கு வந்திருக்கக் கூடிய விஞ்ஞானப் பூர்வமான தீர்வுதான் “எனர்ஜிவாஸ்து” (pyramid vastu) என்ற சக்தி அலைகள் சார்ந்த வாஸ்து முறை ஆகும்.



பிரமிடு வரலாறு:









எகிப்துநாட்டில் உள்ள கிரேட்பிரமிடு மிகச்சரியான கணிதஅளவுகள், பொறியியல், வானியல் நுட்பங்கள் கொண்டு நான்குமுக்கோணப் பக்கங்கள் சுமார் 15˚ சாய்வில் வைத்துக்கட்டப்பட்டுள்ளது. இதன் பிரத்தியேகமான வடிவமைப்பு ஆகாயத்திலிருந்து காஸ்மிக் எனர்ஜி, பூமியிலிருந்து காந்தஅலைச்சக்திகளை இழுத்து பிரமிடு உள்ளே குவிக்கிறது. பிரமிடு உள்ளே இந்தசக்தியானது நுண்ணிய அலைகளாக (nano waves) பரவுகின்றது. இது பயோகாஸ்மிக் எனர்ஜியைப் போல் சக்தி வாய்ந்தது என்று ‘பாட்ரிக் பிளானகன்’ என்ற ஜெர்மன் ஆய்வாளர் கூறுகிறார். பிரமிடு வடிவியல் சார்ந்த சக்தியை உருவாக்கும் கருவியாகச் செயல்படுகிறது என்றும் விளக்குகிறார். கிரேட் பிரமிடின் அமைப்பு, விகிதாச்சார அளவில் செய்யப்பட்ட சிறியமாதிரி பிரமிடுளும் கூட இதேசக்தியை உருவாக்கி பிரமிடுஉள்ளே குவிக்கிறது.   இப்படிப்பட்ட பிரமிடு சக்தியைப் பயன்படுத்தி நோய்களை குணமாக்க, கட்டிடங்களின் வாஸ்துசக்தியை அதிகரிக்க,தண்ணீரை மருந்தாக மாற்ற,      மனஅமைதிபெற, சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக்க என்று எல்லாவழிகளிலும் பயன்படுத்தலாம். இன்று பிரமிடும் அதன் சக்தியும் மனிதனுக்குரிய வாழ்க்கைச் சாதனமாகவே மாறிவிட்டது.

பிரமிடு வாஸ்து 

நம் வசிப்பிடமாகிய கட்டிடம் சதுரமாகவோ, செவ்வகமாகவோ இருக்கும். இந்தமுப்பரிமாண அமைப்பானது பூமி, மற்றும் அண்டவெளியில் ஒரு குறிப்பிட்ட வெளியை அடைத்துக் கொண்டு, பூமியோடும், ஆகாயவெளியோடும் நேரடியாகத் தொடர்பு கொள்கிறது. இதன் காரணமாக நம் வசிப்பிடங்களில் பல்வேறு விதமான சக்தி அலைகள் உருவாகின்றன. அவற்றைப் பற்றி பார்ப்போம்.

நம்முடைய கட்டிடத்தின் தரைத்தளத்தில் காந்தஅலைசக்தி (magnatic field or earth energy) உருவாக்கவேண்டும்.

உங்கள் வீடு நான்கு திசைகளாகிய வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய பூமியின் திசைகளோடு இணக்கமாக அமைந்திருக்கவேண்டும். அதாவது 0˚ அளவுக்கு சரியாக அமைந்திருந்தால் வாஸ்துபலம் நிறைந்திருக்கும். அது திசைகாட்டும் கருவியின் திசையில் இருந்து 10˚ அல்லது 15˚ அளவுக்கும் அதிகமாக விலகியிருந்தால் அது வாஸ்துப்படி தீங்கை ஏற்படுத்தும். இத்தகைய திசைமூடம் உள்ள வீடுகளில் வாஸ்துப்படி அறைகளைக் கட்டமுடியாது. இவ்வீடுகளில் குழப்பம், சண்டை, சச்சரவுகள் ஏற்படும். மங்களகரமான காரியங்கள் தடைப்பட்டுவிடும்.
magnetic flux spread through NE to SW in the flooring

சதுரமும்இ செவ்வக வடிவமும் அதிகச்சக்திவாய்ந்தஇ செயல்விரைவுடைய வடிவங்களாகும்.குறிப்பாக சதுரவடிவம்
புவிகாந்தக்கோடுகளோடு ஒத்திசைந்து செல்கின்றன. புவிஈர்ப்பு சக்தியும்இ புவிகாந்தப்புலமும் தடையின்றி ஒழுங்கமைப்போடு பரவுகின்றன. ஆகவே வாஸ்துவில் சதுர அமைப்பு உத்தமமானதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் சதுர அமைப்பில் எட்டுத்திசைகளும் சரியாகவும்இ நிலையாகவும் அமைகின்றன. சதுரத்தின் பக்கங்கள் மாறாத நிலைத்தன்மை கொண்டிருக்கின்றன. இந்தப்பண்பு பூமித்தத்துவத்தை உள்ளடக்கியதாகும்.
கட்டிடத்தின் வெளிப்புற வடிவமைப்பானது (முப்பரிமாண அமைப்பு) மெல்லியமின் காந்த அலைதளத்தை உட்புறமாக கவர்ந்து இழுக்கவேண்டும்.
வீட்டின் உள்ளே ஒவ்வொரு மூலையிலும் இந்த அலைகள் (magnetic waves) ஊடுருவி பாய்கிறது. எனவே வீட்டின் ஒவ்வொரு மூலையும் 90˚ திருப்பம் கொண்டதாக இருக்கவேண்டும்.
புவிகாந்தப்புலம் கட்டிடத்தின் தரைப்பகுதியில் வடக்குத்திசையில் இருந்து தெற்கு திசையில் சென்று முடிவடைகின்றது. வீட்டின் மையப்பகுதியில் ஆகாய சக்திகள் (உழஅiஉ நநெசபல) இழுக்கப்படுகின்றன. இந்த இரண்டு விதமான சக்திகளும் தென்மேற்கு மூலையில் சேகரமாகின்றன. இந்த சக்திகள் அலைவடிவில் உற்பத்தியாகி கட்டிடத்தின்
வடகிழக்கு (ஈசான்யம்)இ மையப்பாகம் (பிரம்மஸ்தானம்ää ஆகாயத்தோடு நேரடியாகத் தொடர்புடைய பகுதி) வழியாகக் கடந்து தென்மேற்கு மூலை (கன்னிமூலை) பகுதியில் ஆற்றல் சேகரிக்கப்படுகிறது. அதாவது சக்தியைக் கடத்தும் ஒரு கால்வாய் போல இந்த மூன்று பகுதிகளும் செயல்படுகின்றன. இது கட்டிடத்தின் உள்ளே சக்தி அலைகள் நிலையாகக் கிடைக்கும்படி செய்கிறது.
நம் வசிப்பிடங்களில் நுண்ணிய ஒலி அதிர்வுகளின் தாக்கம் (mild sound vibration) குறைந்த டெசிபல்அளவில் உருவாகின்றது. அதில்தடைகள் இருந்தால் சரிசெய்யவேண்டும். இதற்கு சிலமாற்றுப்பரிகார முறைகள் தேவைப்படும்.
வீட்டின் மேற்கூறையில் (ceiling) இருந்து ஆகாயசக்திகள் (cosmic energy) வீட்டின் உள்ளே கீழ்நோக்கி பாய்கிறது. ஆகவே இச்சக்திகள் தடைபடாதவாறு மேற்கூறை அமையவேண்டும். சூரியஒளிஇகாற்று போன்ற பஞ்சபூதசக்திகள் வீட்டில் நேரிடையாக கிடைக்கும்படி வழிசெய்வது அவசியம். பண்டைக்காலத்தில் இத்தகைய சக்திகள் நேரிடையாக வீட்டில் கிடைக்கும்படி வீட்டின் மையப்பகுதியில் திறந்திருக்கும்படி (முற்றம் என்ற பெயர் கொண்டது) அமைத்தனர். இது தலைகீழாக அமைந்த பிரமிடு போன்று வேலைசெய்யும்.
இவைகளைப்போன்ற எல்லாவிதமான சக்திஅலைகள், பஞ்சபூதசக்திகள் தடையில்லாமல் வீட்டில் கிடைக்கவேண்டும். இவை கட்டிடங்களின் உள்ளே உயிரோட்டமாகப் பரவிக்கொண்டேயிருப்பதுதான் “எனர்ஜிவாஸ்து தத்துவமாகும்”.
அண்டவெளி,  பூமியெங்கும் காஸ்மிக் எனர்ஜி,  காந்த அலைச்சக்திகள் வியாபித்திருக்கிறது என்று பௌதிகம் கூறுகின்றது. இந்த சக்தி அலைகள் மனிதன் உட்பட உயிரினங்கள் அனைத்திலும் புற உடம்பைச் சுற்றி (physical body) ஒளிவட்டமாக வியாபித்திருக்கிறது. இது ‘aura’ எனப்படுகிறது. இதே மாதிரி கட்டிடங்களின் உள்ளேயும்,  வெளிப்பகுதியிலும் பஞ்சபூத சக்திகள் காந்த அலைச்சக்திகள் உயிரோட்டமாக இயங்கிக்கொண்டேயிருக்கின்றன. மனிதனுக்கு நோயைக் கண்டுபிடிக்க ஸ்கேன்,  எக்ஸ்ரே போன்ற கருவிகள் இருப்பதுபோல கட்டிடங்களில்,  சக்திஓட்டங்களில் குறைகள்,  தடைகளை கண்டுபிடிக்க பெண்டுலம், லெஹர்ஆண்டனா, செரிஊட்டப்பட்ட டௌசிங்ராடு, பிரிசம் போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகிறது.
கட்டிடங்களில் உள்ள எல்லாக் குறைகளையும் கண்டுபிடித்து சக்திமிக்க தாமிரத்தால் செய்யப்பட்ட பிரமிடுகளைப் பயன்படுத்தி வாஸ்து குறைகளை சரிசெய்துவிடலாம்.

பிரமிடு வாஸ்து :

கட்டிடத்தில் சக்தி ஓட்டங்களில் உள்ள குறைகளைப் பொறுத்து பிரமிடுகளைப் பயன்படுத்தும் முறைகள் மாறுபடும்.
தரைதளத்தில் காந்த அலைச்சக்தி குறைவாக இருந்தால் பூமியின் வடகிழக்கு மூலை, மையப்பகுதி (பிரம்மஸ்தானம்) ஆகிய இடங்களில் பிரமிடை வாஸ்து பூஜை செய்து முறைப்படி தொட்டி அமைத்து மூடவேண்டும்.
வீட்டின் மூலைகளில் (room corners) மின்காந்த அலைகள் தடைபட்டால் ஒவ்வொரு மூலையிலும் பிரமிடு வைக்கவேண்டும்.
மேற்கூறைப்பகுதியில் (roof) காஸ்மிக்எனர்ஜி தடைபட்டால் திறப்பு ஏற்படுத்தவேண்டும் அல்லது பிரமிடு, பல்வேறு மாற்றுப்பரிகார முறைகள் செய்யவேண்டும்.

கட்டிடத்தின் அமைப்பானது ஒழுங்கில்லாமல் வெட்டுப்பட்டிருந்தால் சக்தி அலைகள் சிதறி வெளியேறிவிடும். இக்குறையைச் சரிபடுத்த எட்டு திசைகளிலும் பூமியில் பிரமிடு வைக்கவேண்டும்.
“பிரமிடை சரியான வடக்குதிசை கண்டுபிடித்து [geographical north] முறைப்படி தொட்டிகள் அமைத்து வாஸ்து பூஜை செய்து, பூமியோடுமட்டும் தொடர்புபடுத்தி வைக்கவேண்டும். இதுவே பிரமிடுவாஸ்து தத்துவமாகும்.”
அப்பார்ட்மெண்ட் வீடுகளில் ஒருகுறிப்பிட்ட இடத்தில் தடைகள், குறைகள் இருப்பின் பிரமிடுவாஸ்து முறையில் மேம்படுத்தி சக்தியை அதிகரிக்கச்செய்யலாம். இதற்கு சக்தி வாய்ந்த தாமிரப் பிரமிடுகள் பயன்படுத்தவேண்டும்.

குறிப்பு:

பெண்டுலம், டௌசிங்ராடு, லெஹர் ஆண்டனா ஆகிய கருவிகள் கொண்டு உங்கள் வீடுகளை சோதனை செய்து குறைகள் இருந்தால் பிரமிடுகள் மூலம் சரிசெய்து தருவதற்கு உங்கள் வீடுகளுக்கு நேரிலும் வருகிறோம்.

"உலகிலேயே முதன்முதலாக வாஸ்து பகவானுக்கு சென்னையில் கோயில்"





வாஸ்து பகவானைப் பற்றிய குறிப்புகள் புராண- இதிகாசங்களில் கூறப்பட்டிருந்தாலும், அவரை அறிந்துகொள் ளும் வண்ணம் ஓவியமோ சிற்பமோ உருவாக்கப்பட வில்லை. தற்காலத்தில் வாஸ்துவின் முக்கியத் துவம் பற்றிய விழிப் புணர்ச்சி பெரும்பான்மை யோரிடம் ஏற்பட்டுள்ள நிலையில், பழங்குறிப்புகளில் உள்ளபடி வாஸ்து பகவானுக்கு ஓவிய வடிவில் முதன்முதலாக உருவம் கொடுத்தவர் வாஸ்து ஞானி ஆர்.கே. பகவதிராஜ். தற்போது இவர் வாஸ்து பகவானுக்கு சிலை வடிவிலும் உருவம் கொடுத்துள்ளார். உலகளவில் வாஸ்து பகவானுக்கென்று அமைந்த முதல் சிலை இதுவென்று சொல்ல லாம்.

சென்னை கே.கே. நகரில் அமைந்துள் ளது வலம்புரி மல்ட்டி விநாயகர் ஆலயம். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் இவ்வாலயத்தை அமைத்த பகவதிராஜ், சிவன், அம்பாள் போன்றோரையும் பிரதிஷ்டை செய்தார். அவ்வாலய வளாகத்தில்தான் தற்போது வாஸ்து பகவானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இவ்வாலயத்திற்கு வழிபட வரும் பக்தர்கள், வாஸ்துக் குறை தீர வாஸ்து பகவானை வணங்கிச் செல்கின்றனர். "புதிதாக வீடு கட்டுபவர் களும் கிரகப் பிரவேசம் செய்பவர்களும் இன்னும் இதுபோன்ற கட்டிடம் சார்ந்த பணி களைத் துவக்குபவர் களும் இந்த வாஸ்து பகவானை வணங்கித் துவங்கினால், அனைத் தும் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் நிறைவேறும்' என்கி றார் பகவதிராஜ்.

புதிதாக வாகனம் வாங்குபவர்கள் இவ்வாலயத்திற்கு வந்து பூஜை போட்டுச் செல் கின்றனர். இதனால் விபத்தின்றிப் பயணம் செய்யலாம் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை!
எம்மெம்.
படங்கள்: எஸ்.பி. சுந்தர்  


நன்றி : நக்கீரன் 

வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமம்



ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
தன்வந்திரி பீடத்தில் அமைத்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு வாஸ்து ஹோமத்துடன் விசேஷ அபிஷேகம் நடைபெற்ற காட்சி. இதில் வீடு பிரச்சனை, தொழிற்சாலை பிரச்சனை, நிலப்பிரச்சனை உள்ளவர்களும், ரியல் எஸ்டேட் வியாபாரிகளும் மற்றும் பலரும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று, பூஜை செய்த செங்கல், மச்ச யந்திரம், வாஸ்து யந்திரம் பெற்றுச் சென்றனர். இதைத் தொடர்ந்து அன்னதானம் நடைப்பெற்றது.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

நன்றி http://www.mysixer.com/