சனி, 14 நவம்பர், 2015

அருள்வாக்கு நம்பலாமா -

அருள்வாக்கு நம்பலாமா -1

பல இடங்களில் கேள்வி பட்டிருப்போம் ,அப்பா யாரடா அது அந்த ஆளுக்கிட்ட போய் உட்கார்ந்தா ,நம்ம வரலாறு அத்தனையும் ,சும்மா சும்மா புட்டு புட்டு வைக்கிறாய? என்று பல பேர் வாயடித்து கொண்டு போனதை கேட்டிருக்கிறேன்.ஏன் ,என் வாழ்விலேயே ஒரு சிறந்த ஆன்மீக வாதியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் பொது தான் நானும் இப்படி ஆச்சரியப்பட்டேன்.
                          ஏனென்றால் நானே அன்று தான் அவரை முதல்  முறை பார்க்கிறேன்.அவர் பெயர் ,போட்டோவில் அவரின் உருவம் மட்டுமே கண்டதுண்டு,நேரில் பொய் அவர் முன்னே உட்காரும் பொது எனக்கு என்ன பிரச்சனை,எதற்க்காக வந்தேன்,அதிலிருந்து மீள என்ன வழி என்று அவர் எனக்கு அத்தனையும் கூறினார்.
                                                     நானும் அசந்துவிட்டேன் ,அதெப்படி பாக்காமலேயே எப்படி ஒருவரின் அனைத்து விஷயங்களும் தெரிய வரும் என்று.முதலில் ஆச்சரியமாக பார்த்தாலும் பின்பு இது எப்படி ஆராய்ச்சி இறங்கும் போது தான்,'ஓ' இதுதான் விஷயமா என்று பின்னாளில் வாழ்வில் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் .
                        நானும் இதை ஒரு வெத்து வெட்டு தான் முதலில் தவறாக புரிந்து நடந்தேன்.எதையும் தீர விசாரிப்பது தானே நியாயம்.
நான் பெற்ற அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

அருள்வாக்கு என்பது என்னவென்றால்,நாம் சாதாரண மனிதர்கள் கூறுவது நாவை பயன்படுத்தி கூறுவது,இதை வாக்கு என்று கூறுவார்.அதே சொல்லை (மனிதர் கூறும் சொல் ) தெய்வம் கூறினால் அது அருள் வாக்கு.இது பொய்க்காது,இது முக்காலத்தையும் அறியும்.

1.யட்சணியை கொண்டும் குறி சொல்ல முடியும்.

2.அருள்வாக்கு பயிற்சி எடுத்து பின்பு வெற்றி பெற்று குறி சொல்வது.

3.முன்னோர் ஆவிகள்,குலதெய்வம் ஆகியவற்றை கொண்டு குறி சொல்வது.

யட்சனி கொண்டு குறி கேட்கும் பொது அதில் தவறு வர வாய்ப்புகள் அதிகம்,அது நமது முக்காத்தையும் கூறுமே தவிர ,பிரச்னைக்கு என்ன ஆலோசனை என்று அவ்வளவு எளிதாக கூற முடியாது.எதற்கு என்றால் அதுவும் நம்மை போல் ஒரு உயிரினம்,அதற்க்கு காலத்தை உணரும் சக்தியை இறைவன் படைத்து இருக்கிறான்.அவ்வளவுதான்,அது கூறும் அனைத்தும் சரியாகி விடாது.

                     அருள்வாக்கு பயிற்சி எடுத்து ,இதற்கென்றே சில பிரத்யேக பயிற்சி உண்டு ,அதனால் அதை முடித்து கொண்டு கூறுவது,நம் ஆழமான அதாவது ஆழமான அலைகள் மூலம் முக்காலமும் உணர முடியும்.இதில் ஓரளவு மிக சரியான தீர்வு கிடைக்கும்.

                                பின்பு குலதெய்வம்,அல்லது முன்னோர்கள் ஆத்மா மூலம் அருள்வாக்கு கேட்பது.இப்போது இதுதான் பல இடங்களில் குறி சொல்ல காரணம்.பல இடங்களில் குறி சொல்வது இந்த முறை பின்பற்றிதான் குறி சொல்ல படுகிறது.

                                     இதை பற்றி சற்று தெளிவாக பார்க்க எனது பதிவில் குலதெய்வம் எதற்கு என்று பதிவு போட்டிருப்பேன்.படிக்கவும் .அதில் ஒரு குலதெய்வம் என்பது 13 தலைமுறை வரை மட்டுமே வரும்.

   ஒரு தலைமுறை = 33 ஆண்டுகள் (33 * 13=429)

மேற்கூறிய 426 வருடங்களுக்கு உண்டான உட்பட்ட நிகழ்வுகள்,கடந்த மற்றும் எதிர்க்கால அனைத்தும் கூறப்படும்.ஆனால் அதற்க்கு மேல் கூற இயலாது.

                  எனக்கு தெரிந்து தேனியில் ஒரு குறி சொல்லும் ஆள் இருந்தனர்.அவர் குறி கூற ஆரம்பிக்கிறதுக்கு முன்பு 10 FULL சரக்கை உள்ளே விட்டுவிடுவார்,கிட்டத்தட்ட 50 சுருட்டை பிடித்து கொண்டு  குறி கூறுவார்.

ஆனால் அப்படி செய்தால் மட்டுமே அவரால் குறி கூற முடியும்.ஜோதிட ரீதியாக ஆராயும் பொது ,அவர்கள் ஜாதக கட்டத்தில் 2 ம் ஸ்தானமான வாக்கு ஸ்தானம் ஆட்சி ,உச்சம் பெற்று அதில் கேது அல்லது குரு வின் பார்வை ,பரிவர்தனை பெற்றிருக்கும்.

                                  இரண்டாம் வீட்டில் புதன் உச்சம் பெற்றிருப்பர்.இரண்டாம் வீடான ஸ்தானத்தில் கேது இருப்பார் அல்லது செவ்வாய் இருப்பார் ,இருக்கும் லக்னத்தை பொறுத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக