சனி, 14 நவம்பர், 2015

அருள்வாக்கு நம்பலாமா - 2

அருள்வாக்கு நம்பலாமா - 2

சென்ற பதிவில் ஜாதக கட்டத்தை பார்த்தோம் ,அதை பற்றி சற்று தெளிவான விளக்கங்களை இப்போது பார்ப்போம்.அதெப்படி அருள்வாக்கு என்பது எல்லோருக்கும் வருவதில்லை ?அப்படி வர முயற்சி செய்தால் அனைத்தும் சாத்தியமாகி விட முடியுமா ?அப்படி அருள்வாக்கு என்பது சொல்ல தெரிந்தால் இப்போது கொலை ,கொள்ளை எல்லாம் எளிதாக கண்டுபிடித்து விட முடியுமல்லவா ?

                                   பொதுவாக அருள்வாக்கு என்பது எல்லோருக்கும் வரகூடியது அல்ல.அருள்வாக்கு பயிற்சியும் உள்ளது.முதலில் அருள்வாக்கு கூறுபவர்கள் ஒரு தெய்வ நம்பிக்கை கொண்ட ஆளாக இருக்க வேண்டும்.இதற்க்கு பூர்வ ஜென்ம புண்ணியம் வேண்டும்.இதுபோன்ற புண்ணிய பலன் உள்ளவர்களால்தான் குலதெய்வம்,ஆவி போன்ற சக்திகளின் தொடர்பை பெற முடியும்.
                                   ஒரு சிலருக்கு மிக சிறிய வயதில் அருள்வாக்கு கூற வரும்.எனக்கு தெரிந்து 7 வயது சிறுமி அருள்வாக்கு கூறும் என்று கேள்விபட்டிருக்கிறேன்.ஜோதிடர்கள் எப்படியோ அப்படிதான் அருள்வாக்கு கூறுபவர்களும்,வித்தியாசம் என்னவென்றால் அவர்கள் நவகிரக இயக்கங்களை கற்றுக்கொண்டு கூறுவார்,இதேபோல் இவர்கள் (அருள்வாக்கு கூறுபவர்கள் )ஒரு தெய்வ சக்தியின் துணை கொண்டு,அந்த தெய்வ சக்தியின் உதவியோடு ,நவகிரக இயக்கத்தை ( சூட்சமமாக )கண்டறிந்து நம்மிடம் கூறுவார்.

                                            இவர்கள் இரண்டிற்கும் ஒரே காரணம் நவகிரக இயக்கங்கள்தான்.நவகிரகம் அனைத்தும் காலபைரவரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.அருள்வாக்கு கூறுபவர்களும் ,காலபைரவரின் பிரதிபிம்பங்களே.

உதாரணம் : நாசடர்டர்மஸ்  எனும் மேல்நாட்டு ஞானி ஆழ்நிலை தியானம் மூலம் ,தனக்குள் இருக்கும் மூளையின் ஒரு பகுதியான கடந்த கால மற்றும் எதிர்க்கால நினைவலை தட்டி எழுப்பி கூறுகின்றனர்.அதாவது பின்னாளில் என்ன நடக்க போவது என்று நாம் திரையரங்குகளில் திரைப்படம் எப்படி பார்ப்போம் ,அது போன்று அவர்களின் மண் கண்களுக்கு ஓடும் ,எதை பற்றி சிந்தித்தாலும் அதற்க்கான விடை தெரியவரும்.

                                   இதனால்தான் சுவாமி விவேகானந்தர் " எல்லா வலிமையையும்,உதவியும் உனக்குள்ளே உள்ளது என்று கூறினார்". ஆகா இதை நம்மால் கூட செய்ய முடியும்.

                                   ஆனால் இதை செய்ய எத்தனை பேருக்கு தான் மனம் வருகிறது.கடவுள் படைப்பில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு மகத்துவம் உண்டு .பின்னாளில் வர போகும் இயற்க்கை சீற்றத்தை ,பறவை விலங்குகளால் அறிந்து அதிலிருந்து தன்னை காப்பாற்றி கொள்ளும் பொது,
5 அறிவான விலங்கிற்கு இப்படி ஆற்றலை தரும் பொது,6 அறிவு கொண்ட நமக்கு எவ்வளவு ஆற்றல் படைத்து இருப்பன் என்று யோசிக்க வேண்டும்.

                                   அருள்வாக்கு என்பது நம்முடைய தேவைகளை,நம்முடைய முயற்சியினை கொண்டு அதை நிறைவேற்றவே இறைவன் நமக்கு தந்த ஒரு வரபிரசாதம்.அருள்வாக்கில் நவகிரக இயக்கங்களை சூட்சம சக்தி அறிந்து சொன்னாலும் விதியை மாற்றி விட முடியாது,ஏன் படைத்த அந்த இறைவானால் கூட மாற்ற இயலாது.

                  அதிலிருந்து தற்காத்து கொள்ளவே நமக்கு அருள்வாக்கு கூறுபவர்கள் வழிகாட்ட இறைவன் இதை கொடுத்துள்ளான்.அதை நமது வாழ்வுக்கு ஏற்றார்ப்போல் பயன்படுத்துவது வாழ்க்கை மேலும் சிறப்பு தரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக