வாஸ்து பகவானைப் பற்றிய குறிப்புகள் புராண- இதிகாசங்களில் கூறப்பட்டிருந்தாலும், அவரை அறிந்துகொள் ளும் வண்ணம் ஓவியமோ சிற்பமோ உருவாக்கப்பட வில்லை. தற்காலத்தில் வாஸ்துவின் முக்கியத் துவம் பற்றிய விழிப் புணர்ச்சி பெரும்பான்மை யோரிடம் ஏற்பட்டுள்ள நிலையில், பழங்குறிப்புகளில் உள்ளபடி வாஸ்து பகவானுக்கு ஓவிய வடிவில் முதன்முதலாக உருவம் கொடுத்தவர் வாஸ்து ஞானி ஆர்.கே. பகவதிராஜ். தற்போது இவர் வாஸ்து பகவானுக்கு சிலை வடிவிலும் உருவம் கொடுத்துள்ளார். உலகளவில் வாஸ்து பகவானுக்கென்று அமைந்த முதல் சிலை இதுவென்று சொல்ல லாம்.
சென்னை கே.கே. நகரில் அமைந்துள் ளது வலம்புரி மல்ட்டி விநாயகர் ஆலயம். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் இவ்வாலயத்தை அமைத்த பகவதிராஜ், சிவன், அம்பாள் போன்றோரையும் பிரதிஷ்டை செய்தார். அவ்வாலய வளாகத்தில்தான் தற்போது வாஸ்து பகவானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இவ்வாலயத்திற்கு வழிபட வரும் பக்தர்கள், வாஸ்துக் குறை தீர வாஸ்து பகவானை வணங்கிச் செல்கின்றனர். "புதிதாக வீடு கட்டுபவர் களும் கிரகப் பிரவேசம் செய்பவர்களும் இன்னும் இதுபோன்ற கட்டிடம் சார்ந்த பணி களைத் துவக்குபவர் களும் இந்த வாஸ்து பகவானை வணங்கித் துவங்கினால், அனைத் தும் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் நிறைவேறும்' என்கி றார் பகவதிராஜ்.
புதிதாக வாகனம் வாங்குபவர்கள் இவ்வாலயத்திற்கு வந்து பூஜை போட்டுச் செல் கின்றனர். இதனால் விபத்தின்றிப் பயணம் செய்யலாம் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை!
எம்மெம்.
படங்கள்: எஸ்.பி. சுந்தர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக